விக்டோரியாவில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனமோட்டுபவர்களை கண்டுபிடிப்பதற்கென நிறுவப்பட்டுள்ள நிரந்தர மற்றும் mobile speed கமராக்கள் ஊடாக கடந்த நிதியாண்டில் மாத்திரம் ஏறக்குறைய 400 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் Department of Justice and Community Safety-இடமிருந்து 7 news பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Ballarat Road, Footscray-இல் அமைந்துள்ள mobile speed கமராவிலேயே அதிக வாகன ஓட்டுநர்கள் அகப்பட்டிருக்கின்றனர்.
இதன் மூலம் கடந்த ஆண்டு விக்டோரிய அரசுக்கு 1.58 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர விக்டோரியாவிலுள்ள mobile speed கமராக்களில் அதிகம் பேர் அகப்படுகின்ற -முதல் 10 இடங்களிலுள்ள -கமராக்கள் எங்கெங்கு காணப்படுகின்றன என்ற பட்டியலை கீழே காணலாம்.
2. Ormond Esplanade, Elwood- (1 மில்லியன் டொலர்களுக்கும் அதிக வருமானம்)
3. Great Ocean Road, Skenes Creek-(1 மில்லியன் டொலர்களுக்கும் அதிக வருமானம்)
4. Beaconsfield Parade, Middle Park
5. Huntingdale Road, Mount Waverly
6. Wanda Street, Mulgrave
7. Lum Road, Wheelers Hill
8. Yarra Boulevard, Richmond
9. Belmore Road, Balwyn
10.High Street Road, Mount Waverly
இதேவேளை விக்டோரியாவில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கமராக்கள் ஊடாக கடந்த ஆண்டு 96 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது.
மெல்பேர்னுக்கும் ஜீலோங்குக்கும் இடையில் அமைந்துள்ள இக்கமராக்களில் தினமும் 200 வாகன ஓட்டிகள் அகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
