SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் இரண்டு மாதங்களில் 8 பேர் துப்பாக்கி வன்முறைக்கு பலி!

Victoria Police at the scene of a multiple shooting outside Love Machine nightclub in Prahran, Melbourne, Sunday, April 14
Victoria Police at the scene of a multiple shooting outside Love Machine nightclub in Prahran, Melbourne, Sunday, April 14 Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

மெல்பேர்னில் கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற ஆறு வெவ்வேறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவங்கள் தொடர்பாக மூன்று பேர் மீது மாத்திரமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று துப்பாக்கித்தடை தொடர்பான ஆதரவுக்குரல்களை எழுப்பிவருபவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

விக்டோரிய எதிர்க்கட்சித்தலைவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது துப்பாக்கி தடையை அமுல்படுத்துவதற்கு பொலீஸாருக்கு கூடுதல் அதிகாரமும் வளங்களும் தேவை என்று கூறியுள்ளார். சமூகத்தின் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் தேக்கநிலையில் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கி தடைகள் தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் 165 உத்தரவுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அவற்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் குழுவைச் சேர்ந்தவர்கள் உட்பட 145  நபர்களுக்கு இதுகுறித்த கடிதம் அனுபப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now