SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ணில் காணாமல் போன பல் மருத்துவர் சடலமாக மீட்பு!

Tinu Thomas
Source: Victoria Police

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: Victoria Police



Skip to article content

மெல்பேர்ணில் கடந்த புதன்கிழமை காணாமல் போன பல் மருத்துவர் டினு தோமஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த 28 வயதான டினு தோமஸ் தனது பெற்றோருடன் மெல்பேர்ணின் Rowille பகுதியில் வசித்து வந்தார்.

மருத்துவ சிகிச்சை ஒன்றின் கீழிருந்த தோமஸ் காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல்துறையிடம் முறைப்பாடு செய்ததையடுத்து இவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றையதினம் இவரது வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்திவைக்கப்பட்ட காரினுள்ளிருந்து தோமஸின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவரது மரணத்திற்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் எவ்வித தகவல்களையும் வெளியிடாத போதிலும், இம்மரணம் சந்தேகத்திற்கிடமானதல்ல என தெரிவிக்கப்படுகின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now