மெல்பேர்னில் மதகுரு மீது கத்திக்குத்து தாக்குதல்!

Father Tomy Kalathoor Mathew

Source: Leader

மெல்பேர்ன் Fawkner North இலுள்ள St Matthew’s தேவாலயத்தில் கடமையாற்றிய, இந்தியப் பின்னணி கொண்ட மதகுரு மீது, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான Fr Tomy Kalathoor Mathew என்ற மதகுரு மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், கழுத்தில் கத்திக்குத்துக்கு இலக்கான இவர், உயிராபத்தின்றி தப்பித்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட 72 வயதான நபர், குறித்த மதகுரு மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'இந்தியர் என்பதால், ஒரு இந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்க வேண்டும்' எனக்கூறி தன்மீது அந்நபர் தாக்குதல் நடத்தியதாக, Fr Tomy Kalathoor Mathew எஸ்பிஎஸ் மலையாள ஒலிபரப்பிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இத்தாக்குதலுக்கு ஏதேனும் பின்னணி இருப்பதாகவோ அல்லது இதை ஒரு இனவாத தாக்குதலாகவோ தான் பார்க்கவில்லை என்றும் Fr Tomy Kalathoor Mathew கூறியுள்ளார்.

 


1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: SBS Malayalam



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now