SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடரூந்து நிலையங்கள்

flinders street
Source: Flickr

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

மெல்பேர்ன் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொடரூந்துப் பயணமும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுவது நாமறிந்த ஒன்று.

இந்தநிலையில் மொனாஷ் பல்கலைக்கழகம் மேற்கொண்டிருந்த ஆய்வின்படி, இரவு நேரத்தில் தொடரூந்து நிலையங்களில் பெண்கள் மிகவும் அசௌகரியமாக உணர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

16 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினடிப்படையில், மெல்பேர்னிலுள்ள தொடரூந்து நிலையங்களில் எவற்றில் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் மற்றும் எவற்றில் பாதுகாப்பற்று உணர்கிறார்கள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மெல்பேர்னின் மிகப் பிரசித்திபெற்ற Flinders Street தொடரூந்து நிலையம் மற்றும் Richmond, Brunswick, Box Hill, Footscray, Jewell, Jacana ஆகியவற்றில் பெண்கள் பாதுகாப்பற்று உணர்கின்றனர்.

அதேநேரம்    Melbourne Central, Glen Waverley, Hawksburn, Southern Cross, South Kensington, Eaglemont, West Footscray ஆகிய தொடரூந்து நிலையங்களில் தாம் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்துள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now