SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் தமிழர் செறிந்து வாழும் இடத்தில் இஸ்ரேல் மாணவி படுகொலை!

instagram
Source: dailymail

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் நேற்று அதிகாலை பற்றைகளின் மறைவிலிருந்து வழிப்போக்கர்களால் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள இளம்பெணின் பெயர் Aya Masarwe (வயது 21) என்றும் இஸ்ரேலை சேர்ந்த இவர் LaTrobe - Bundoora பல்கலைக்ககழகத்தில் கல்வகற்று வந்தவர் என்றும் ஆஸ்திரேலியாவில் கல்விகற்பதற்காக தற்காலிக விஸாவில் தங்கியிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சகோதரியுடன் தங்கியிருந்து சீனாவில் கல்வி கற்றுவிட்டு மெல்பேர்ன் வந்த Aya Masarwe கடந்த ஆறு மாதங்களாக LaTrobe பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்தவர்.

LaTrobe பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வசித்துவந்த இவர் சம்பவம் நடந்த அன்று North Melbourne பகுதியில் இடம்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அன்று இரவு Tram வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது Face time வசதியுடன் சீனாவிலுள்ள தனது சகோதரியுடன் பேசியிருக்கிறார். பேசிக்கொண்டுவரும்போது தொலைபேசி கீழே விழுந்த சத்தம் கேட்டிருக்கிறது. அதன்பின்னர், அவரிடமிருந்து எந்தத்தொடர்பும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் தான் கல்விகற்கும் சக மாணவர்களுடன் whats app குழுவில் அங்கத்தவராக இருந்த Aya Masarwe அன்றைய இரவு, எந்தத்தொடர்பாடலுமில்லாமல் இருந்தார் என்றும் இதனால் இவரது சக மாணவர்களும் அன்றைய இரவு பதற்றமடைந்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அடுத்தநாள் காலை இவர் Bundoora பிரதேசத்திலுள்ள சன நெருக்கடிமிக்க பகுதியில் புதர்கள் நிறைந்த பகுதியொன்றுக்கு பின்னால் அப்பகுதியில் சென்ற வேலையாட்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.புதர்களின் பின்னால் காலையில் கண்டுபிடிக்கப்பட்டபோது இவர் குற்றுயிராக காணப்பட்டார் என்றும் அவரது உடலில் மூச்சு இருந்துகொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.

அதன்பின்னர், பொலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலீஸார், தடயவியல் நிபுணர்கள், விசாரணை அதிகாரிகள் எனப்பலர் அங்கு வந்து Aya Masarwe இறந்துவிட்டதை உறுதி செய்திருக்கிறார்கள்.

Bundoora பகுதிக்கு வருகின்ற Tram வாகனத்தில் முதல் நாள் பின்னிரவில் வந்து இறங்கிய Aya Masarwe வீடு செல்லும் வழியில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற வாய்ப்பை தாங்கள் மறுக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால் மரணத்துக்கான எந்த சாட்சிகளோ ஆதாரங்களோ எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ள பொலீஸார் குறிப்பிட்ட பெண் Tram வாகனத்தில் வந்து இறங்கியதற்கான கமரா காட்சி, அந்தப்பகுதி வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலுள்ள CCTV கமரா காட்சிகள், அன்றிரவு அந்த பகுதியால் பயணம் செய்தவர்களின் வாகன கமரா (DashCam) காட்சிகள் என்று பல ஆதாரங்களை  விசாணை செய்து வருகிறார்கள். பொதுமக்களிடமும் உதவியை கோரியிருக்கிறார்கள்.

இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி குறிப்பிட்ட பெண்ணின் அடையாளம் மாத்திரமே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Aya Masarwe இஸ்ரேலின் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அமெரிக்காவிலுள்ள இவரது மாமனாரின் ஊடாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து குடும்பத்தினருக்கு தற்போது Aya Masarwe மரண செய்தி தெரியவந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. தனது மகளின் சடலத்தை உத்தியோகபூர்வமாக அடையாளம் காட்டுவதற்காக Aya Masarwe வின் தந்தையார் இஸ்ரேலிலிருந்து புறப்பட்டு தற்போது ஆஸ்திரேலியா வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுளள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now