SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் தட்டம்மை பரவும் அபாயம்

Centres for Disease Control
Source: Centres for Disease Control

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

மெல்பேர்னில் இருவருக்கு measles எனப்படும் தட்டம்மை நோய் இருப்பது மருத்துவமனையால் உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்த எச்சரிக்கை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் ருமேனியா நாட்டுக்குச் சென்று திரும்பிய ஆண் ஒருவரும் மெல்பேர்னைச் சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு தட்டம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இருவரும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 13 க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மெல்பேர்ன்  மற்றும் பலாரட் ஆகிய நகரங்களின் பல பகுதிகளுக்கு, குறிப்பாக வணிகவளாகங்கள், ரயில் என்று பொது இடங்களுக்கு சென்று வந்தவர்கள் என்பதால் பலருக்கு இந்த நோய் தொற்றி இருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கீழ்க்காணும் இடங்களுக்கு நீங்கள் சென்றிருந்தால் காய்ச்சல்,rash போன்ற தட்டம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றதா என்பது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

  • IKEA Richmond on September 6–13 between 11:00am-1:30pm
  • Chadstone Shopping Centre on September 7–9 between 12:00pm-3:00pm, and 10:00am–1:00pm
  • Federation University, Ballarat on September 8
  • Frankston train line on September 11 and 12, and at Armadale station and Southern Cross station during peak hour

தட்டம்மை வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு ஊசிகள் போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் குறைவு என்று கூறப்படுகிறது. அதே வேளையில் 42 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது இளம் வயதில் தட்டம்மை நோய்க்கு உள்ளாகியிருந்தால் அவர்களும் இதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now