Thunderstorm Asthma எனப்படும் கொடிய ஆஸ்துமா வியாதியை ஏற்படுத்தவல்ல காலநிலை அடுத்த சில வாரங்களில் எந்நேரமும் மெல்பேர்னில் தோன்றலாம் என்று ஆஸ்திரேலிய காலநிலை அவதானிப்பு நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணங்களினால் மூச்செடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்குபவர்கள், ஆஸ்துமா நோயுள்ளவர்கள் ஆகியோர் இந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்கு எந்நேரமும் puffers போன்றவற்றை கையோடு வைத்திருக்கும்டி சுகாதர தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் இடம்பெற்ற Thunderstorm Asthma தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுமார் 1400 பேர் நாடெங்கிலுமுள்ள பல்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் அவர்களில் மெல்பேர்னில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வசந்த காலத்தில் பூக்களினிலிருந்தும் மரங்களிலிருந்தும் காற்றில் பரவும் மகரந்த துணிக்கைகள் மூச்சில் கலந்துகொள்வதால் ஏற்படுகின்ற ஆஸ்துமா வியாதியால் பாதிக்கப்படுகின்றவர்கள், Thunderstorm Asthma மூலம் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று ஆஸ்திரேலிய சுகாதார தரப்பினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
