SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் Monash Freeway போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு!

Transport on the Monash freeway in Melbourne, Victoria.
Road operator Transurban is to drop a number of toll fees (AAP) Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

மெல்பேர்ன் Monash Freeway -இல் பல ஆண்டுகளாக தொடரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக குறித்த நெடுஞ்சாலை விரிவாக்கப்படுகிறது.

தற்போது இந்நெடுஞ்சாலையில் 8 லேன்கள் காணப்படும் நிலையில் இவை பத்தாக அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கான அனுமதியை சுயாதீன உட்கட்டமைப்பு ஆலோசனைக் குழு வழங்கியுள்ளது.

இதன்படி அரசு வழங்கும் அரை மில்லியன் டொலர்கள் நிதியுதவியில் அடுத்த வருடம் ஆரம்பமாகும் 36 கிலோமீட்டர் தூரத்திற்கான வீதி விரிவாக்கல் பணிகள், 2022ம் ஆண்டளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த செயற்றிட்டத்திற்கு மொத்தமாக 711 மில்லியன் டொலர்கள் செலவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய தொகையை விக்டோரியா மாநில அரசு வழங்கவுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now