நியூசிலாந்திலிருந்து மெல்பேர்ன் நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா பயணிகள் கப்பலில் இருந்து இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
கப்பலின் மேல் தளத்துக்கு சென்ற இவர் அங்கிருந்து மாயமாகியுள்ளமை கமராக்களின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது.காணாமல்போன இளைஞர் 22 வயதுடைய விக்டோரிய நபர் என்று என்று தெரிவிக்கபட்டுள்ளது.
நியூசி லாந்திலிருந்து மெல்பேர்னுக்கு திரும்பிக்கொண்டிருந்த Golden Princess கப்பலில் பணியாளர்கள் உள்ளடங்கலாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்த இந்த இளைஞன் திங்களன்று இரவு வேண்டுமென்றே கப்பலின் மேல்தளத்துக்கு சென்றுள்ளமை கமராக்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கப்பல் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் அவரை கண்டுபிடிக்கமுடியாதநிலையில் இவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்படும் அதேநேரம் இவரது மரணத்தில் சந்தேகங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
இச்சம்பவம் காரணமாக நாளையதினம் மெல்பேர்ன் திரும்பவேண்டிய கப்பல் இன்றையதினமே மெல்பேர்னை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .
காணாமல்போன இளைஞனின் குடும்பத்தவர்களுக்கு கப்பல் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
For help, call Lifeline 13 11 14 or beyondblue 1300 22 4636.
