அடுத்த வருடத்திலிருந்து மெல்பேர்ன் பொதுப்போக்குவரத்துக் கட்டணம் 5 சதவீதத்தால் உயர்த்தப்படுகிறது.
இதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் இரு மணிநேரத்துக்கான பஸ், Tram மற்றும் தொடரூந்துப் பயணங்களுக்கான Myki கட்டணம் 20 சதங்களால் அதிகரித்து $4.10 ஆக அறவிடப்படும். அதேபோல் முழு நாளுக்குமான கட்டணம் $8.20 ஆக அதிகரிக்கிறது.
இது தவிர வருடாந்த adult Myki pass கட்டணம் 80 டொலர்களால் அதிகரிக்கப்படுகின்ற அதேநேரம் concession ticket கட்டணம் 10 சதங்களால் அதிகரித்து $2.05 ஆக மாற்றப்பட்டுள்ளது.
எனினும் concession ticket கட்டணம் முன்னர் 16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 18 வயது வரையான இளைஞர்களும் இதற்குள் அடங்குகின்றனர்.
மேலும் 5 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
