மெல்பேர்னில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட "thunderstorm asthma" காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ள அதேநேரம் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மரணமடைந்த எட்டாவது நபர் Northern வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த Roxburgh Parkஐச் சேர்ந்த 58 வயதான ரஞ்சித் பீரிஸ் என்பவராவார்.
கடந்த 21ம் திகதி இரவு இவருக்கு ஆஸ்துமா ஏற்பட்டு சுவாசிக்கத் திணறிக்கொண்டிருந்தாகவும் Ambulanceக்காக சுமார் ஒரு மணித்தியாலமாக காத்திருந்தபோது அவர் சுயநினைவை இழந்துவிட்டதாகவும் அவரது மகன் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரஞ்சித் பீரிஸ், சிகிச்சை பலனின்றி நேற்று மரணமானதாக குறிப்பிடப்படுகின்றது.
"Thunderstorm asthma" என்பது புயல் மற்றும் மழை காரணமாக Pollen எனப்படும் பூந்தாதுக்கள் மிகச்சிறு துணிக்கைகளாக உடைக்கப்பட்டு வளிமண்டலத்தில் பரவி, மூக்கு வழியாக நுரையீரலுக்குள் செல்வதால் ஏற்படும் சுவாசப்பிரச்சினையாகும்.
இந்த 'Thunderstorm asthma" ஏற்கனவே hayfever, மற்றும் pollen ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் தாக்குகின்ற ஒன்று என்ற போதிலும், சாதாரணமாக ஆஸ்துமா ஏற்படாத ஒருவரையும் இது தாக்கக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
Share
