மெல்பேர்ன் உட்பட விக்டோரியா மாநிலம் முழுவதும், இன்று மாலை முதல் அடுத்த 4 நாட்களுக்கு மோசமான வானிலை காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னல், புயல் மற்றும் கடும் மழைவீழ்ச்சி என்பவற்றுடன்கூடிய வானிலை காணப்படும் என்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 300மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையளவில் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டின் பின்னர் விக்டோரியா மாநிலம் எதிர்கொள்ளும் மோசமான வானிலை இதுவென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடும் மழை மற்றும் புயலின் போது பொதுமக்கள் வெளியில் நடமாடாமல் பாதுகாப்பாக இருக்கும் அதேநேரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 132 500 என்ற இலக்கத்தில் அவசர சேவைப் பிரிவினரை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
