SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் வாகன விபத்தில் இலங்கை மாணவி பலி! சாரதி தப்பியோட்டம்!!

Police Tape
File photo Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மெர்பேர்ன் Clayton பகுதியிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகனவிபத்தில் இலங்கை பின்னணி கொண்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

அதிவேகமாக வந்த கார் ஒன்று Wellington, Scenic Boulevard பகுதியில் வீதியைக் கடந்துகொண்டிருந்த மாணவியை மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.

நேற்று இரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் நிஷாலி பெரேரா என்ற மாணவி அந்தஇடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தினை ஏற்படுத்திய கார், சம்பவம் நடைபெற்று ஒரு மணி நேரத்தின் பின் Clayton, North Road பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டிச் சென்றவரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விபத்தினை நேரில் கண்டவர்கள் அல்லது இது தொடர்பில் விபரம் அறிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now