SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இலங்கையர் கைது

போலீசாருக்காக 90 நிமிடங்கள் விமானத்துக்குள்ளேயே காத்திருந்த பயணிகள் மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.

CC
Manodh Marks was taken to court but did not appear because of security concerns. Source: AAP: David Crosling

1 min read

Published

Updated

By Praba Maheswaran


Skip to article content
CC
Source: Supplied: Andrew Leoncelli

Melbourne இலிருந்து Kuala Lumpur நோக்கிக் கிளம்பிய MH128, சிறிது நேரத்தினுள் 25 வயதுடைய ஆண் பயணியொருவர் கரியநிறப் பொருளொன்றுடன் விமானியின் அறைக்குள் நுழைய முற்பட்டார். தனது கையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிய அவரைப் பயணி ஒருவருடன் விமனச் சிப்பந்திகள் மடக்கிப் பிடித்து நிலத்தில் கட்டிவைத்தனர்.

இதனிடையே விமானி பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததுடன் விமானத்தை Melbourne நோக்கித் திருப்பினார்.

Melbourne இல் தரையிறங்கிய விமானம் பொலிஸாரின் வருகைக்காக 90 நிமிடங்கள் வரை காத்திருந்தது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர், மெல்பேர்ன் தென்கிழக்கில் Dandenong இல் வசித்துவந்த சமையல் துறை மாணவனென்றும் அவர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு மன நோய் வரலாறு உண்டென்றும், புதன்கிழமை தான் மனநல சிகிச்சை நிலையத்திலிருந்து  விடுவிக்கப்பட்டாரென்றும் தெரியவந்துள்ளது.

CC
Source: Supplied: Andrew Leoncelli

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now