மெல்பேர்னில் அடுத்த மாதம் முதல் முக்கிய நிகழ்வுகளின்போது ட்ரோன்களின்(drones) மூலம் வான் வழி ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக விக்டோரிய பொலீஸார் அறிவித்துள்ளார்கள்.
விக்டோரிய பொலீஸாரின் வான்படையினரால் இயக்கப்படவுள்ள இந்த ட்ரோன் ரோந்து சேவை மாநிலம் முழுவதும் 24 மணிநேரமும் தேவைக்கேற்ற வகையில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தங்களது வெவ்வேறு பொலீஸ் நடவடிக்கைகளின்போதும் உதவும் வகையில் இந்த விசேட ட்ரோன் சேவை பயன்படுத்தப்படவுள்ளதாக பொலீஸ் அதிகாரி Craig Shepherd தெரிவித்திருக்கிறார்.
அவசர கால சூழ்நிலைகள் உட்பட சில குறிப்பிட்ட இடங்களுக்கு முதலுதவிப் பொருட்களை கொண்டுசெல்வதற்கும்கூட இந்த ட்ரோன் சேவையை பயன்படுத்துவதற்கு பொலீஸார் திட்டமிட்டிருப்பதாக கூறும் Craig Shepherd, அடுத்த மாதம் முதல் 12 மாதங்களுக்கு சுமார் 50 ட்ரோன்கள் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
