மெல்பர்ன் நகரின் CBD பகுதியின் Bourke Street ற்கு அருகில் கடந்த வெள்ளிகிழமை ஒருவர் வேண்டுமென்றே பாதசாரிகள் மீது காரை இடித்ததில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயரந்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று மாதக் குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 10வயது சிறுமி, 25 மற்றும் 33 வயது ஆண்கள், 32 வயது பெண் என்று நான்குபேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காரை ஓட்டிவந்து பொதுமக்களின் மீது இடித்தவர் 26 வயது Dimitrious Gargasoulas என்றும், இப்படி பொதுமக்களைக் கொல்ல என்ன காரணம் என்பதை தாம் இன்று விசாரிப்போம் என்றும் போலீசார் கூறியுள்ளனர். Dimitrious Gargasoulas மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்றும், போதைபோருளுக்கு அடிமையானவர் என்று கூறப்பட்டாலும், இந்த தகவல்களை போலீசார் இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று விக்டோரிய மாநில Premier Daniel Andrews கூறியுள்ளார்.
