SKIP TO MAIN CONTENT

மூன்றாவது தொகுதி மனுஸ் அகதிகள் அமெரிக்கா புறப்பட்டனர்!

File image
File image Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, மனுஸ் தடுப்பு முகாமிலிருந்து மூன்றாவது தொகுதி அகதிகள் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான், மியன்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 18 அகதிகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளநிலையில், இதுவரை மனுஸ் தடுப்பு முகாமிலிருந்து 85 பேரும், நவுறு தடுப்பு முகாமிலிருந்து 49 பேரும் அமெரிக்கா சென்றுள்ளனர்.

இவ்வாறு அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் அதேநேரம், ஒரு வருடத்தின் பின் அவர்கள் அங்கு நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்குத் தகுதி பெறுவர். பின் 5 வருடங்கள் கழித்து அமெரிக்க குடியுரிமை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now