ஜூலை முதல் மாணவர்களுக்கான புதிய எளிமையாக்கப்பட்ட விசா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய , எளிமையாக்கப்பட்ட ஒற்றை விசா முறையை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அறிமுகப் படுத்தவுள்ளது. இதனால் , மாணவர்களுக்கு மட்டும் இல்லாது, கல்வி நிறுவனங்களுக்கும் விசா பெற சமர்ப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
simplified student visa framework (SSVF) எனப்படும் இப் புதிய விதிமுறைகளின் படி கடந்த 2012 முதல் அமுலில் இருந்த streamlined visa processing (SVP) முறை விலக்கப்படும்.இதனால் மாணவர்களுக்கு இருந்த எட்டு வகை விசாக்கள் பதிலாக இனி ஒரு வகை விசா பிரிவு மட்டும் அறிமுகப்படுத்தப்படும்.
தவிர சர்வதேச மாணவர்கள் அவரவர் நாடுகளுக்கான குடிவரவு இடர் சோதனை சட்டகம் immigration risk framework தொடர்பான மதிப்பீடு, ஒற்றை முறையிலானதாக மாற்றப்படும். அதாவது முன்பு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு முறை இருந்தது.இனி ஒரே முறையில் மதிப்பீடு செய்யப்படும். இதன் படி அவர்களின் நாடு, அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களில் இதுவரை அந் நாட்டில் இருந்து வந்து பயின்றவர்கள் ஏற்படுத்திய குடிவரவு சட்டத்துக்கு மாறான அல்லது அவர்களின் குடிவரவு சட்டத்துக்கு இசைவான நடவடிக்கை போன்றவற்றை வைத்தே நிர்ணயிக்கப்படும்.
மாணவரின் நிதி நிலைமை, ஆங்கில தேவைகள் ஆகியவை அந் நாட்டிலிருந்து வரும் மாணவரின் வரவு குடிவரவுத்துறைக்கு ஏற்படுத்தக் கூடிய அபாய அடையாளம் சார்ந்தும், கல்வி பயில தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் சார்ந்தும் நிர்ணயிக்கப்படும்.
1 ஜூலை 2016 முதல் மாணவர்க்கு ஒரு விசா வகை மட்டுமே இருக்கும். மாணவர் விசா துணைப்பிரிவு 500 ஆகும்.இது கல்விக்காகத் தேர்ந்தெடுக்கும் துறை பாரபட்சம் ஏதுமின்றிய ஒற்றை விசாவாகும்.
இதன் படி, புதிய எளிமையாக்கப்பட்ட விசா முறையில் SSVF simplified student visa framework:
- அனைத்து சர்வதேச மாணவர்க்கும் படிப்பின் பிரிவு சார்பின்றி ஒரே வகை விசா 500.
- அனைத்து சர்வதேச மாணவர்களும் இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- அவரவர் நாடுகளுக்கான குடிவரவு இடர் சோதனை சட்டகம் immigration risk framework தொடர்பான மதிப்பீடு சார்ந்து ஆங்கிலம் மட்டும் நிதி நிலைமைக்கு சமர்ப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தீர்மானிக்கப்படும்
இந்தப் புதிய new Student visa (subclass 500) விசாவுக்கு
1. தற்காலிக நுழைவுக்கு உண்மையான ஆர்வம் - Genuine Temporary Entrant (GTE) நிரூபிக்கப்படவேண்டும்
i. ஒருவரின் தனிப்பட்ட சூழ் நிலை சாராமல் ஒவ்வொரு மாணவரின் வருகையும் கல்வி கற்க வேண்டிய உண்மையான ஆர்வம் தற்காலிக நுழைவுக்கு மட்டுமே என நிருபிக்கப்படவேண்டும். இனி இது எல்லா நாட்டு மாணவர்க்குமான ஒரே பொது அளவீட்டின் கீழ் தீர்மானிக்கப்படும்
ii. சாதாரணமாக உண்மையான ஆர்வம் , முந்தைய குடிவரவு பதிவுகளில் அவர்கள் தொடர்பான சட்டத்துக்கு இசைவான அல்லது மாறான பதிவுகள்,அவர்களை நாடு திரும்பத் தூண்டும் காரணிகள் , அவர்களை ஆஸ்திரேலியாவில் தங்கத் தூண்டும் காரணிகள் , அவரவர் நாட்டு சூழ் நிலை, அவர்களின் தனிப்பட்ட சூழ் நிலை சார்ந்தே தீர்மானிக்கப்படும்.
2. ஒரு பதிவு செய்யப்பட்ட கல்விக்கான அனுமதி
i. சர்வதேச மாணவர் பதிவு செய்யப்பட்ட கல்விக்கான அனுமதி யை Confirmation of Enrolment (CoE) பெற்றிருக்க வேண்டும்
ii. இது வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத்துறை அனுசரணை மாணவர்க்கு விதிவிலக்காகும். இந்த வகை மாணவர் வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத்துறை ஆதரவுக் கடிதம் இணைக்க வேண்டும்: மாணவப் பரிமாற்றத்தின் கீழ் வருவோர் அதற்குரிய ஆதரவு கடிதம் இணைக்க வேண்டும்.உயர் ஆய்வுக் கல்வியில் ஈடுபட்டிருப்போர் ஆய்வுக்கட்டுரை பரிசீலனை காலத்துக்கான தங்கும் தேவையை நிரூபிக்க ஆவணங்களைத் தரவேண்டும்.
3. நிதி நிலைமை மற்றும் ஆங்கிலம் தொடர்பான தேவைகள்
i. எல்லா சர்வ தேச மாணவர்களும் கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கை செலவுகளை சந்திக்க வேண்டிய முழுப் பணத்தையும் வைத்திருப்பதற்கான சான்றுகளைக் காட்ட வேண்டும்.
a. முழு கல்விக்காலத்துக்கான வாழ்க்கை செலவு வங்கியில் இருக்க வேண்டும் அல்லது வங்கிக்கடனாக கிடைத்திருக்க வேண்டும்
வாழ்க்கை செலவு மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு AUD$18,610 என நிர்ணயிக்கப்படுள்ளது. இது முந்தயதை விட AUD$610 அதிகரிக்கப்படுள்ளது.
வாழ்க்கை செலவு மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு AUD$18,610 என நிர்ணயிக்கப்படுள்ளது. இது முந்தயதை விட AUD$610 அதிகரிக்கப்படுள்ளது.
b. முன் பணம் கட்டிய வீட்டில் தங்கும் வசதி ஏற்றுக்கொள்ளப்படும்.
c. மாணவர் பாதுகாவலருக்கு ஆண்டுக்கு AUD$ 19,830.00
d. மாணவரின் துணைவருக்கு ஆண்டுக்கு AUD$ 6,940.00
e. மாணவரின் பிள்ளகளுக்கு ஒரு பிள்ளைக்கு ஆண்டுக்கு AUD$ 2,970.00
ii. சர்வ தேச மாணவர்களும் குடிவரவு இடர் சோதனை சட்டகம் immigration risk framework தொடர்பான மதிப்பீடு சார்ந்தும் அவர்களின் நாடு மற்றும் கல்வி பயில இருக்கும் நிறுவனங்களின் குடிவரவு சார்ந்த நடவடிக்கைகள் பற்றிய முந்தைய அவதானிப்புக்களின் அடிப்படையிலும் ஆங்கிலம் மட்டும் நிதி நிலைமை சான்றுகளின் தேவை நிர்ணயிக்கப்படும்.
iii. மேற்படி ஆங்கிலம் மட்டும் நிதி நிலைமை சான்றுகள் விசா விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் தவறினால் விசா மறுக்கப்படலாம்.
4. உடல் நலம் மற்றும் நன்னடத்தை
i. சர்வ தேச மாணவர்களும் உடல் நலம் மற்றும் நன்னடத்தை சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ii. தகுந்த உடல் நலக் காப்புறுதி Overseas Student Health Cover (OSHC) ஆகியவற்றை முன் கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.
5. விசா வழங்க எடுக்கும் நேரம்:
விசா விண்ணப்புத்துடன் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்
இல்லையெனில் கால தாமதம் அல்லது விசா மறுப்பு நிகழ வாய்ப்பு உள்ளது.
எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு மாத காலத்துக்குள் விசா வழங்கப்படும்
6. கட்டணம்:
புதிய மாணவர் விசா கட்டணம் AUD $565 இலிருந்து $535. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது
7. வேலை:
கல்வி தொடங்கும் போதே வேலையையும் தொடங்கலாம். பாடம் நடக்கும் காலம் தவிர்ந்த ஏனைய கால கட்டத்தில் நேரக்கட்டுப்பாடின்றி வேலை செய்யலாம். முது நிலை அல்லது ஆய்வுக் கல்வியில் ஈடுபட்டிருப்பவர்க்கு நேரக்கட்டுப்பாடின்றி வேலை செய்ய முடியும்.
8. கல்வி முடிந்த பின் வேலை:
கல்வி முடிந்த பின் பணி சார்ந்த விசா இரண்டு ஆண்டுகள் இள நிலை, முது நிலை மாணவர்க்கும், ஆய்வுக் கல்வி கற்போருக்கு நான்கு ஆண்டுகள் பணி சார்ந்த விசாவும் கிடைக்கும்
9. புது விசா எப்போது அமுலுக்கு வரும்?
1 ஜூலை 2016க்குப் பின் விண்ணப்பிக்கும் சர்வ தேச மாணவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இப்போது மாணவர்களாக subclasses 570-576 விசா பிரிவின் கீழ் இருக்கும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விசா இல்லாமல் இதன் பின் ஆஸ்திரேலியா வர இருந்தால் இனி புதிய வகையில் subclass 500 விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய வகை SSVF மூலம் இதுவரை தற்காலிக பட்டதாரிகள் விசா ( subclass 485 ) வகையில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்களால் எந்த வித பாதிப்பும் இருக்காது.
டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன், வழக்குரைஞர் - குடிவரவு ஆலோசகர் (OMARN #0531496). தேசிய அங்கீகாரம் பெற்ற மத்தியஸ்தர்
பொறுப்பு மறுப்பு
இந்தக் கட்டுரை புதிய விசா குறித்த ஒரு விளக்கமே தவிர புதிய விசா குறித்த சட்ட ஆலோசனை அல்ல.தனிப்பட்ட நபர்கள் தங்கள் நிலைமைக் குறித்து தனிப்பட்ட ஆலோசனையை தகுதி வாய்ந்த வழக்குரைஞர் அல்லது குடிவரவு ஆலோசகர் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.