மேற்கு ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரின் Bedford பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேர்த் பிராந்திய பொலிஸ் நிலையத்துக்கு இன்று காலை சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலங்கள் மீட்கப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் முழுமையான விவரம் , உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தற்போதைக்கு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தடயவியல் நிபுணர்களும் பொலிஸாரின் விசேட புலனாய்வுப்பிரிவினரும் சம்பவ இடத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரிடம் தகவல் வழங்கியவர் தடுப்பு காவலில் இருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் Ellenbrook பகுதியில் இரு பிள்ளைகள் மற்றும் அவர்களது தாயார் கொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
