சிட்னியில் அழகுக் கலை (beauty clinic) கூடமொன்றில் மார்பைப் பெரிதாக்கும் முயற்சியில் Jean Huang எனும் 35 வயது இளம்பெண் கடந்தவாரம் உயிரிழந்தார். சீனாவிலிருந்து சுற்றுலாப்பயணி விசாவில் ஆஸ்திரேலியா வந்திருந்திருந்த Jie Shao எனும் பெண் மயக்கமருத்து செலுத்தி இந்த சிகிச்சையை செய்ய முற்பட்டார் என்று கூறப்படுகிறது. மயக்கமருத்து (local anaesthesia) செலுத்தும் முறையில் தவறு நடந்ததையடுத்து Jean Huang மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் அவர் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சிகிச்சை செய்ய முற்பட்டதாக கூறப்படும் Jie Shao வுக்கு ஆஸ்திரேலிய மருத்துவப் பின்னணி இல்லை என்பது அரசுக்கும் மருத்துவ அமைப்புகளுக்கும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மார்பை பெரிதாக்கும் சிகிச்சைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர NSW மாநில அரசு முடிவு செய்துள்ளது.
