SKIP TO MAIN CONTENT

மெடிகெயார் பணம் வந்து சேரவில்லையா? வங்கிக் கணக்கை சரிபாருங்கள்!

Medicare
Medicare Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

நாடுமுழுவதுமுள்ள சுமார் 6 லட்சத்தி 70 ஆயிரம் பேர் தமது வங்கிக்கணக்கு விபரங்களை பதிவுசெய்யாத காரணத்தினால் அவர்களுக்கு மெடிகெயார் ஊடாக வழங்கப்படவேண்டிய 110 மில்லியன் டொலர்கள் தேங்கிக்கிடப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவர் ஒருவரையோ அல்லது மருத்துவ சேவை ஒன்றையோ பெறுபவதற்கு பணம் செலுத்தியிருந்தால் அதற்குரிய குறிப்பிட்ட தொகை ஒன்றினை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சாத்தியம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றது.

இவ்வாறு பணத்தை பெறவேண்டுமெனில் ஒருவரது சரியான வங்கிக்கணக்கு விபரங்கள் மெடிகெயாரில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சுமார் 6 லட்சத்தி 70 ஆயிரம் பேர் தமது வங்கிக்கணக்கு விபரங்களை பதிவுசெய்யாத அல்லது புதுப்பிக்காத காரணத்தினால் அவர்களுக்குச் சென்றுசேரவேண்டிய பணத்தை வழங்க முடியாதுள்ளதாக கூறியுள்ள Human Services அமைச்சர் Michael Keenan,  ஒவ்வொரும் தமது வங்கிக்கணக்கு விபரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now