SKIP TO MAIN CONTENT

முதியோர் இல்ல பணியாளர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் பயிற்சி:பரிந்துரை!

An elderly man in Brisbane.
Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவிலுள்ள முதியோர் இல்லங்களில் பணிபுரிவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளமும் கூடுதல் பயிற்சிகளும் வழங்கப்படவேண்டும் என்று முதியோர் இல்ல விவகாரங்கள் தொடர்பாக நடைபெற்றுவரும் Royal Commission விசாரணை அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்ட்டில் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்றுவரும் விசாரணை அமர்வில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லங்களில் பணிபுரிவதற்கு விசேட தகுதியுடையவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் முதியவர்களின் தேவைகளை மனதார உணர்ந்து செயலாற்றுபவர்களாகவும் விசேட பயிற்சியுடைவர்களாகவும் உள்வாங்கப்படுவது அவசியமாகவுள்ளது. ஆனால் முதியோர் இல்லத்தில் பணிபுரிவதற்கு தகுதியானவர்களை பெற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. முதியோர் இல்லத்தில் பணிபுரிவவதை தங்களது தொழில் தேடும் பாதையில் கடைசித்தெரிவாக வைத்திருக்கவே அநேகம் பேர் விரும்புகிறார்கள். ஆகவே இந்த வேலைக்குரிய கவர்ச்சிகரமான ஊதியம் மற்றும் விசேட பயிற்சி ஆகியவை அவசியம் - என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now