Apple நிறுவனத்தின் ஒரு தொகுதி MacPro - 15 inch மடிக்கணினிகளை திரும்பக்கோரும் அறிவிப்பொன்று அந்த நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
2015 செப்டம்பர் மாதத்திற்கும் 2017 பெப்ரவரி மாதத்துக்கும் இடையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு தொகுதி MacBook Pro (Retina, 15-inch, Mid 2015) மடிக்கணினிகளை மாத்திரமே இவ்வாறு மீளக்கோருவதாக Apple நிறுவனம் அறிவித்துள்ளது.
வேறு எந்த ரக Apple கணினிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் Apple நிறுவனம் அறிவித்திருக்கிறது.
குறிப்பிட்ட ரக மடிக்கணினிகளில் பொருத்தப்பட்ட battery மின்கலங்களில் கோளாறு இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாலேயே இவ்வாறு மீள்கோரப்படுவதாக Apple நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரச்சினைக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட ரக மடிக்கணினிகளை பயன்படுத்தவதை உடனடியாக நிறுத்தும்படியும், தமது நிறுவனத்தை தொடர்புகொண்டு இலவசமாக மின்கலத்தை மாற்றிக்கொள்ளுமாறும், இரண்டு வாரங்களில் மின்கலங்கள் மாற்றிக்கொடுக்கப்படும் என்றும் Apple நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
உங்கள் மடிக்கணினியும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள கீழ்க்காணும் இணைப்புக்குச் செல்லுங்கள்.
Share
