SKIP TO MAIN CONTENT

நூற்றுக்கணக்கான அகதிகள் தொடர்பில் எவ்வித தீர்வையும் அறிவிக்காத லேபர் & லிபரல் கட்சிகள்

ஆஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளும், தமக்கான தீர்வு தொடர்பில் எந்தத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை என, bridging விசாவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Asylum seekers arriving by boat
Asylum seekers arriving by boat Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

படகு மூலம் ஆஸ்திரேலியா வருபவர்கள் இங்கு ஒருபோதும் குடியமர்த்தப்படமாட்டார்கள் என்ற சட்டம், 2013ம் ஆண்டு ஜுலை 19ம் திகதி, Kevin Rudd  அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் இங்கு வந்தவர்கள் தொடர்பில், எவ்வித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஆஸ்திரேலியா வந்தவர்களில் சுமார் 1380 பேர், இன்னமும் மீள்குடியேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.

நியூசிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவர். அதேநேரம் அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின்கீழ் இன்னமும் 250 பேர் அமெரிக்காவில் குடியமர்த்தப்படலாம்.

நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களின் கீழ் மொத்தம் 700 பேர் மாத்திரமே குடியமர்த்தப்படலாம் என்கின்ற நிலையில், எஞ்சியுள்ள 500க்கும் மேற்பட்டவர்களின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அகதிகளை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துவது தொடர்பிலான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுவதற்கான வாக்குறுதிகளை வழங்குவதற்கு லேபர் மற்றும் லிபரல் கட்சிகள் மறுத்துள்ளன.

நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்றால், ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் வாழ்ந்துவரும் அகதிகளுக்கு, நிரந்தர விசா வழங்கப்படும் என லேபர் கட்சி அறிவித்துள்ளது.

ஆனால் 2013 ஜுலை 19க்கு பின்னர் இங்கு வந்து bridging விசாவுடன் வாழ்ந்துவருபவர்கள் தொடர்பில் லேபர் கட்சி எவ்வித திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

அதேபோன்று தாம்  மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அகதிகள் கொள்கையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என லிபரல் கூட்டணி அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரு பிரதான கட்சிகளும் தமக்கான தீர்வு தொடர்பில் எவ்வித கொள்கைகளையும் அறிவிக்காத பின்னணியில், நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதபட்சத்தில் தமது எதிர்காலம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை என bridging விசாவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த 1380 பேரில் பெரும்பாலானோர் உண்மையான அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் நவுறுவில் வாழ்ந்துவரும் அதேநேரம், ஏனையோர் bridging விசாவுடன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்றனர்.

நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று எந்தக்கட்சி ஆட்சிக்குவந்தாலும் குறித்த அகதிகள் தொடர்பில் கவனம்செலுத்த வேண்டுமென Refugee Council of Australia வலியுறுத்தியுள்ளது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now