லிபரல் கட்சிக்குள் இடம்பெற்ற தலைமைத்துவ மாற்றம் மற்றும் இழுபறிகளுக்கு பின்னர் நடத்தப்பட்டிருக்கும் கருத்துக்கணிப்பில், லேபர் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.அதன் தலைவர் Bill Shorten-க்கான மக்கள் ஆதரவு புதிய பிரதமர் Scott Morrison-ஐ விட கூடுதலாக உள்ளது.
The Australian நடத்திய கருத்துக்கணிப்பிலேயே இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இருகட்சி விருப்பு அடிப்படையில், லேபருக்கு 51 வீதமாகவும் லிபரலுக்கு 44 வீதமாகவும் காணப்பட்ட மக்கள் ஆதரவு, இரண்டு வாரங்களில் பாரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. லேபருக்கான ஆதரவு 56 வீதமாக அதிகரித்திருக்கிறது. லிரபல் 49 வீத ஆதரவை மாத்திரமே பெற்றுள்ளது.
அதேவேளை, Scott Morrison சரியான தலைவர் என்று 33 வீதமானவர்கள் மாத்திரம் ஆதரவளிக்க, நாட்டை நிர்வகிக்கக்கூடிய திறமையானவர் லேபர் கட்சி தலைவர் Bill Shorten என்று 39 வீதமானவர்கள் அங்கீகரித்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் Malcolm Turnbull-உடன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்போடு ஒப்பிடும்போது, இது Bill Shorten-க்கு ஏழு சதவீத வளர்ச்சி என்பதுடன், பெப்ரவரி 2015ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Shorten முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
