மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியிலுள்ள காட்டுப்பிரதேச உல்லாச விடுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்த அயர்லாந்தை பூர்வீகமாகக்கொண்ட லண்டன் சிறுமியொருவர் காணாமல்போயுள்ளார்.
சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவுகொண்ட சுற்றுலாப்பயணிகள் தங்குமிட பகுதியில், குடும்பத்தினருடன் தங்கியிருந்த 15 வயது சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்ந்தும் மர்மமாகவுள்ளதாக தேடுதல் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த இச்சிறுமியைத் தேடும் பணியில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் நூறு தேடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போதைக்கு சிறுமி கடத்தப்பட்டமைக்கான தடயங்கள் எதுவும் இல்லை என்றும் காணாமல்போயுள்ளதாகவே தாங்கள் கருதுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் குறித்த சிறுமி விசேட தேவைக்குட்பட்டவர் என்றும் அவர் தனியாக எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கடத்தப்பட்டிருப்பதாகவே தாம் நம்புவதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
