SKIP TO MAIN CONTENT

நாடுகடத்தப்படும் நிலையிலிருந்த இளைஞர் விலவூட் தடுப்புமுகாமில் மரணம்!

A vigil outside the Villawood Immigration Detention Centre
A vigil outside the Villawood Immigration Detention Centre. Source: Seif Al-Mutairi

1 min read

Published


Skip to article content

சிட்னி விலவூட் தடுப்புமுகாமில் தற்கொலை செய்துகொண்ட 29 வயது இளைஞரின் மரணத்துக்கு நீதிகோரி போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த முஹமட் என்பவரே கடந்த டிசம்பர் 12ம் திகதி தற்கொலை செய்திருந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா வந்த முஹமட், விசா முடிவடைந்தபின்னரும் நாட்டில் தங்கியிருந்த காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டு, நாடுகடத்தப்படும் நோக்கில் விலவூட் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தநிலையில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து முஹமட்டின் மரணத்திற்கு நீதிகோரியும் ஆஸ்திரேலிய அரசு தனது குடிவரவு கொள்கைகளை மாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தி விலவூட் முகாமிற்கு வெளியே அகதிகள் நல செயற்பாட்டாளர்களால் அமைதியானமுறையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14, Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at Beyond Blue.org.au and lifeline.org.au


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now