SKIP TO MAIN CONTENT

பண மோசடி குற்றச்சாட்டில் இலங்கை பின்னணியுடைய நபர் மெல்பன் விமானநிலையத்தில் கைது!

மெல்பனில் நிதித் திட்டமிடல் ஆலோசகராகக் காட்டிக் கொண்டு 9 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர், வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

arrest
Credit: Wikipedia

2 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

49 வயதான இந்நபர் இலங்கையில் பிறந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறும் முன், குறைந்தபட்சம் 34 பேரை ஏமாற்றி, அவர்களது ஓய்வுக்கால நிதியை-மொத்தம் $9,094,405 டொலர்களை தன்னிடம் முதலீடு செய்யவைத்ததாக கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை மெல்பன் விமான நிலையத்தில் வந்திறங்கியவர் மீது, ஏமாற்றி நிதி ஆதாயம் பெற்றமை தொடர்பில் 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மெல்பனின் Brighton பகுதியில் நிதித் திட்டமிடல் ஆலோசகராக பணிபுரிந்த அந்த நபர், licence- உரிமம் பெறாதவர் என்று பொலீஸார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2014 முதல் 2018 வரை அந்த நபருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குறைந்தது 34 பாதிக்கப்பட்டவர்களை பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படும் வேறு யாராவது இருக்கிறார்களா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக Bali, Mexico City மற்றும் Costa Rica ஆகிய இடங்களில் வாழ்ந்துவந்த இவர் மெல்பன் திரும்பியபோது Interpol அதிகாரிகள் துப்புக்கொடுத்ததன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த நபர் மெல்பனில் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்ததாகவும், அவரிடம் உயர்தர கார்கள், ஹெலிகாப்டர், படகு மற்றும் sports கார்கள் இருந்தன என்றும் குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் ஒரு விளையாட்டு பந்தய ஆர்வலரான இவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் முன் GT Trophy Series மற்றும் Australian Endurance Championships உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் சில முதன்மை மோட்டார் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now