SKIP TO MAIN CONTENT

பெர்த்தில் bedsheets-ஐ பயன்படுத்தி தனிமைப்படுத்தல் விடுதியிலிருந்து தப்பித்த நபர்!

பெர்த்திலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியொன்றிலிருந்து தப்பித்துச்சென்ற நபர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

A Queensland man has been charged after escaping from hotel quarantine in Perth where he was being held after being denied entry to Western Australia.
A Queensland man has been charged after escaping from hotel quarantine in Perth where he was being held after being denied entry to Western Australia. Source: WA Police

2 min read

Published

Updated


Skip to article content

Highlights

  • செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:sbs.com.au/coronavirus
  • ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
  • கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: COVID-19 vaccine in your language.

கடந்த திங்கட்கிழமை பயணக்கட்டுப்பாடுகளைமீறி குயின்ஸ்லாந்திலிருந்து வந்த 39 வயது நபருக்கு பெர்த்திற்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன் அங்கிருந்து 48 மணிநேரங்களுக்குள் திரும்பிச்செல்லுமாறு பணிக்கப்பட்டது.

மேலும் குயின்ஸ்லாந்து திரும்புவதற்கான விமானப்பயணம் மேற்கொள்ளும்வரை பெர்த்திலுள்ள Riverdale தனிமைப்படுத்தல் விடுதியில் அந்நபர் தங்கவைக்கப்பட்டார்.

நான்காவது மாடியில் தங்கவைக்கப்பட்ட குறித்த நபர், தனது அறையிலிருந்த bedsheets- படுக்கைவிரிப்புகளைச் சேர்த்து முடிச்சிட்டு அதைப் பயன்படுத்தி ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்து ஓடியிருக்கிறார்.

இதையடுத்து சுமார் 8 மணிநேரங்கள் கழித்து Mount Lawley பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன் அவருக்கு கோவிட் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now