SKIP TO MAIN CONTENT

ஃகாஸ் சிலிண்டர் தாக்கியதில் சிட்னி நபர் ஒருவர் மரணம்

நேற்றிரவு சிட்னி நகரைத் தாக்கிய புயலில் சிக்கிய ஒருவர் மீது ஃகாஸ் சிலிண்டர் வீழ்ந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலதிக தரவுகள் அறிந்தவர்களைக் காவல்துறை தேடுகிறது.

A man was killed by a flying gas bottle during severe wind gusts and storms in Sydney.
A man was killed by a flying gas bottle during severe wind gusts and storms in Sydney. Source: Damilare Polley / Twitter

1 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

சிட்னியின் புறநகர் Chatswoodஐச்  சேர்ந்த 37 வயதான ஒருவர், நேற்றிரவு நள்ளிரவுக்கு சற்று முன்னர், வேலை முடித்துவிட்டு The Rocks உள்ள ஹாரிங்டன் (Harrington Street) தெருவில் சக ஊழியருடன் நடந்து வந்திருந்த வேளை, ஒன்பது கிலோ கிராம் எடையுள்ள ஃகாஸ் சிலிண்டர் ஒன்று, உயரத்திலிருந்து பறந்து வந்து, இவரது தோள் மேல் விழுந்தது என்று துப்பறியும் ஆய்வாளர் David El-Badawi நேற்று (புதன்கிழமை) காலை தெரிவித்தார்.

"நேற்றிரவு சிட்னியில் ஒரு பெரிய புயல் தாக்கியது, பலமான காற்று, கன மழை பெய்தது.  அந்த வேளை, எங்கோ இருந்து பறந்து வந்த ஃகாஸ் சிலிண்டர் இவர் மீது வீழ்ந்துள்ளது" என்று அவர் கூறினார்.

காயப்பட்டவர் தெருவில் மயக்கமுற்று வீழ்ந்திருந்தார்.  அவருக்கு, அயலவர்கள் முதலுதவி வழங்கியுள்ளார்கள்.  St Vincent's மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் காயங்கள் காரணமாக இறந்து விட்டார்.

இவர் நடந்து வந்த வீதியிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து ஃகாஸ் சிலிண்டர் விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.  இது குறித்து மேலும் அறிந்து கொள்ள, அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now