SKIP TO MAIN CONTENT

கத்தியால் தாக்கவந்தவரை சுட்டுக்கொன்ற பொலீஸ்! மெல்பேர்ன் நெடுஞ்சாலையில் சம்பவம்!

An armed man was shot dead by police on Thursday morning after a standoff on a Melbourne freeway.
An armed man was shot dead by police on Thursday morning after a standoff on a Melbourne freeway. Source: Nine News.

1 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்ன் Monash நெடுஞ்சாலையோரம் நபர் ஒருவர் பொலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவம் மெல்பேர்ன் Dandenong North பகுதியில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றதாக பொலீஸார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

Monash நெடுஞ்சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு குழப்பமான மனநிலையுடன்  நின்றுகொண்டிருந்த நபரை பொலீஸார் அவதானித்துவிட்டு அவரை அணுகியபோது, அவர் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து மிரட்டினார் என்றும் - கத்தியை கைவிடுமாறு அவரை சமாதானம் செய்து  அருகில் செல்வதற்கு முயன்றபோது திடீரென்று கத்தியால் பொலீஸாரை தாக்குவதற்கு முயற்சித்ததாகவும் - அப்போது அவது நெஞ்சில் இரண்டு தடவைகள் பொலீஸார் சுட்டதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மெல்பேர்ன் Narre Warren பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now