SKIP TO MAIN CONTENT

மனுஸ் அகதிக்கு ஆஸ்திரேலியாவின் மற்றுமொரு கௌரவமான இலக்கியப் பரிசு!

Behrouz Boochani on Manus Island.
Behrouz Boochani en la Isla Manus. Source: AAP

1 min read

Published


Skip to article content

மனுஸ் தீவில் வாழ்ந்து வரும் Behrouz Boochani என்ற குர்திஷ் பின்னணி கொண்ட அகதிக்கு ஆஸ்திரேலியாவின் மற்றுமொரு கௌரவமான இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இவரது 'No Friend But the Mountains' என்ற நூலுக்கு இலக்கியத்துக்கான விக்டோரிய அரசின் பரிசாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டிருந்தநிலையில் தற்போது சுயசரிதை எழுத்துக்கான ஆஸ்திரேலிய விருது-National Biography award வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசுத்தொகை 25 ஆயிர ம் டொலர்கள் ஆகும்.

இதுதவிர நியூ சவுத் வேல்ஸ் மாநில premier’s literary விருதாக 10 ஆயிரம் டொலர் பரிசும் Behrouz Boochani-க்கு வழங்கப்பட்டிருந்தது.

ஈரானிலிருந்து வந்து புகலிடம்கோரிய நிலையில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மனுஸ்  தீவில் வாழ்ந்துவரும் Behrouz Boochani, தனது மனுஸ் வாழ்க்கை அனுபவத்தை இந்நூலூடாக பதிவுசெய்துள்ளார்.

Farsi மொழியில் WhatsApp வழியாக பதிவுசெய்த தகவல்களை Dr Omid Tofighian என்பவர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூல் வெளியாவதற்கு முன்னதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் கட்டுரைகள் ஊடாக மனுஸ் தீவு தடுப்பு முகாம் நிலைமைகளை வெளிப்படுத்தி வந்ததன் மூலம் Behrouz Boochani உலகின் கவனத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now