நவுறு மற்றும் மனுசில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது security and character assessment பாதுகாப்பு மற்றும் நடத்தை குறித்த மதிப்பீடுகள் புதிதாக மேற்கொள்ளப்படவுள்ளதாக Attorney-General Christian Porter தெரிவித்துள்ளார்.
கடல் கடந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவதை எளிதாக்கும் சட்டத்திற்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு முன்னர் இவ்வாறான புதிய மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கான தேவை இருக்கவில்லை என்றும் ஆனால் இப்புதிய சட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளமையானது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகமாக அமையலாம் என்பதால் இம்மதிப்பீட்டு நடவடிக்கை அவசியமாவதாக Attorney-General Christian Porter தெரிவித்துள்ளார்.
