SKIP TO MAIN CONTENT

மனுஸ்தீவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

Asylum seekers staring at media from behind a fence at the Oscar compound in the Manus Island detention centre
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மனுஸ்தீவு தடுப்பு முகாமிலுள்ள 3 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டுள்ளது.

ஈரான், ஈராக் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியதாக குறிப்பிடப்படுகிறது.

நேற்றையதினம் Lorengau பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு தொகுதி பாதுகாப்பு படையினர் வேண்டுமென்றே தம்மீது தாக்குதல் நடத்தியதாக, குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள், பப்புவா நியுகினியில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தும் மற்றுமொரு சம்பவம் இதுவென கூறியுள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் நடந்ததை பப்புவா நியூகினி காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபோதிலும், யார் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது என்ற தகவல்கள் இன்னமும் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now