சில நிபந்தனைகளுடன் $70 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடும், இதர செலவுகளையும் ஆஸ்திரேலியா அரசு வழங்க உடன்பட்டிருப்பதாக Slater and Gordon சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பணமானது புகலிடம் கோரி இம்முகாமில் முன்பு இருந்த மற்றும் தற்போது இருக்கின்ற சுமார் 1905 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக Slater and Gordon சட்ட நிறுவனம் கூறியுள்ளது. முகாமில் அவர்கள் தங்கிய காலம் மற்றும் அவர்களுக்கு உண்டான காயங்கள், பாதிப்பின் உக்கிரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர்களுக்கான நஷ்டயீட்டின் தொகை நிர்ணயிக்கப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"This case is not just about me, it is about everyone who has been trapped on Manus Island. Our voices have never been listened to, but today we are finally being heard."
ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றிலேயே மனித உரிமைகளை அடிப்படையாக வைத்து நஷ்டஈடு வழங்கப்படும், முதலாவது மிகப்பெரிய சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த தீவில் நவம்பர் 2012 முதல் டிசம்பர் 2014 வரை தடுத்து வைக்கப்பட்ட 1905 ஆண்கள், அங்கு தாம் நடத்தப்பட்ட முறை தொடர்பில், ஆஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களத்திற்கெதிராக class action எனப்படும் கூட்டு சட்டநடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இவ்வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகவிருந்தது.
விக்டோரிய நீதிமன்றில் ஆரம்பமாகவிருந்த இவ்வழக்கை Slater and Gordon சட்ட நிறுவனம் எடுத்து நடத்தவிருந்தது. இவ்வழக்கு நடைபெற்றிருக்குமானால் 6 மாதங்களுக்கு மேல் இழுப்பட்டிருக்குமெனக் கூறப்படுகின்றது.
Slater and Gordon group leader Rory Walsh said the Commonwealth did not accept liability as part of the settlement, but the "strong message" from the asylum seekers was to accept the money and avoid a trial. "We think it is a very good and strong outcome and we think the court will have no hesitation in approving this figure," he said. "When we were offered sufficient money - and we were - we had no hesitation in taking it."
ஆனால் இந்த வழக்கு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நஷ்டஈடு வழங்குவதற்கான இணக்கப்பாடு ஒன்றுக்கு அரசு வரக்கூடுமென்றும், இதன்மூலம் கணிசமான தொகையொன்று அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடுமென்றும் ஊகம் வெளியாகியிருந்தது.
