SKIP TO MAIN CONTENT

மனுஸ் தடுப்பு முகாம் அகதிக்கு 1 லட்சம் டொலர் இலக்கிய பரிசு!

Manus Island refugee Behrouz Boochani.
Manus Island refugee Behrouz Boochani. Source: SBS News

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மனுஸ் தடுப்பு முகாமில் வாழ்ந்து வரும் Behrouz Boochani என்ற குர்திஷ் பின்னணி கொண்ட அகதிக்கு ஆஸ்திரேலியாவின் கௌரவமான இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இவரது No Friend But the Mountains: Writing from Manus Prison என்ற நூலுக்கு இலக்கியத்துக்கான விக்டோரிய அரசின் பரிசாக ஒரு லட்சம் டொலர்களும் non-fiction பிரிவில் மற்றுமொரு 25 ஆயிரம் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருதுக்கு பரிந்துரைக்கப்படுபவர் ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமைகொண்டவராக இருக்கவேண்டுமென்ற நிபந்தனை உள்ளபோதிலும் Behrouz Boochani-க்கு இதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டிருந்தது.

ஈரானிலிருந்து வந்து புகலிடம்கோரிய நிலையில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மனுஸ் தடுப்புமுகாமில் வாழ்ந்துவரும் Behrouz Boochani, தனது மனுஸ் வாழ்க்கை அனுபவத்தை இந்நூலூடாக பதிவுசெய்துள்ளார்.

Farsi மொழியில் WhatsApp வழியாக பதிவுசெய்த தகவல்களை Dr Omid Tofighian என்பவர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூல் வெளியாவதற்கு முன்னதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் கட்டுரைகள் ஊடாக மனுஸ் தீவு தடுப்பு முகாம் நிலைமைகளை வெளிப்படுத்தி வந்ததன் மூலம் Behrouz Boochani உலகின் கவனத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now