SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட மனுஸ் அகதி பெர்த்தில் மரணம்!

facebook
Source: Facebook

1 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம்கோரி வந்த அகதியொருவர் பெர்த்தில் நேற்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சோமாலிய பின்னணி கொண்ட அப்துல் ரஹ்மான் என்பவரே இவ்வாறு மரணமடைந்ததாகவும் இவரது இறப்புக்கு மாரடைப்பே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக மனுஸ் தீவில் வாழ்ந்துவந்த இவர் அங்கிருந்து நவுறுக்கு அனுப்பப்பட்டு பின் அங்கிருந்து பிரிஸ்பேர்ன் அழைத்துவரட்டு அதன் பின் பெர்திற்கு அனுப்பப்பட்டநிலையில் அங்குவைத்து  மரணமடைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக பல இடங்களில் தடுத்துவைக்கப்பட்ட இவர், தனக்கான எதிர்காலத்தை கண்டடையாமலேயே மரணமடைந்துவிட்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14, More information is available at Beyond Blue.org.au and lifeline.org.au.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now