SKIP TO MAIN CONTENT

மானஸ் தடுப்புமுகாம் மூடப்படுகிறது

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த புகலிடக்கோரிக்கையாளர் தடுப்பு முகாமான மானுஸ் தீவு தடுப்பு முகாமை மூடுவதற்கு அரசு திட்டமிடுகிறது. சில அகதிகள் அந்த நாட்டில் மீள் குடியேற ஆர்வமாக உள்ளனர், மற்றவர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறுகின்றனர்.

Asylum seekers in Delta compound watch as a court appointed party inspects Australias Manus Island detention centre in Papua New Guinea, Friday, March 21, 2014. Papua New Guinea expects to start resettling refugees detained in Australia's offshore process
Asylum seekers in Delta compound watch as a court appointed party inspects Australias Manus Island detention centre in Papua New Guinea, Friday, March 21, 2014. Source: AAP

2 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

பப்புவா நியூகினி அரசுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள பிராந்திய செயலாக்க ஒப்பந்தங்கள் இந்த ஆண்டின் இறுதியில் முடிவுக்கு வருகிறது என்று உள்துறை அமைச்சர் Karen Andrews ஒரு அறிக்கை வாயிலாக அறிவித்தார்.

அதன் பின்னர், பப்புவா நியூகினிய்லுள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான முழுப் பொறுப்பையும் பப்புவா நியூகினி அரசு ஏற்கும்.

நவுரு தீவிற்கு மாறலாம்

தற்பொழுது பப்புவா நியூகினியின் மானுஸ் தீவு தடுப்பு முகாமிலிருக்கும் 124 ஆண்களும் நவுரு தீவிலுள்ள் பிராந்திய செயலாக்க மையத்திற்கு (தடுப்பு முகாமிற்கு) மாற்றலாக விரும்பினால் அங்கு செல்லலாம் அல்லது அல்லது பப்புவா நியூகினியிலேயே மீள் குடியேற விரும்பினால், அங்கே அவர்களுக்குக் குடியுரிமை பெறவும், மீள் குடியேறவும் வழி செய்து கொடுக்கப்படும்.

A supplied image obtained Tuesday, October 31, 2017 of asylum seekers refusing to leave the Manus Island Detention Centre on Tuesday, October 31, 2017. The deadline for the closure of the Manus Island offshore immigration detention centre has passed but d
A supplied image obtained Tuesday, October 31, 2017 of asylum seekers refusing to leave the Manus Island Detention Centre on Tuesday, October 31, 2017. Source: Supplied

மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை எமது அரசு பொறுப்பேற்காமல், அதனை பப்புவா நியூகினி அரசிடம் கையளிக்கிறது என்று The Asylum Seeker Resource Centre இன் Jana Favero குற்றம் சாட்டினார்.

முக்கிய விடயங்கள்:

  • பப்புவா நியூகினி அரசுடனான ஆஸ்திரேலியாவின் செயலாக்க ஒப்பந்தம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முடிவடையும்
  • மானுஸ் தீவு தடுப்பு முகாமிலுள்ள 124 ஆண்கள் பப்புவா நியூகினியில் குடியேறலாம் அல்லது நவுரு தீவிற்கு மாற்றலாகிப் போகலாம்
  • கடல்கடந்த இடங்களில் எமது அரசு நடத்தும் தடுப்புமையங்களில், இதுவரை குறைந்தது 12 பேர் இறந்துள்ளனர்
Rallygoers protest during the Evacuate Manus and Nauru Protest - 'Five Years Too Long, 12 Deaths Too Many' Protest at Town Hall in Sydney on Saturday, July 21, 2018. Refugee Action Coalition (RAC) Sydney organised a protest against mandatory offshore dete
Rallygoers protest during the Evacuate Manus and Nauru Protest - 'Five Years Too Long, 12 Deaths Too Many' Protest at Town Hall in Sydney on Sat, July 21, 2018. Source: AAP

ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த கடல் செயலாக்கம் தொடர்கிறது

மானுஸ் தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டாலும், அரசின் குடிவரவு கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் Karen Andrews கூறினார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now