SKIP TO MAIN CONTENT

மருத்துவர் பற்றாக்குறை: ஆஸ்திரேலிய மருத்துவர்களை பணம் கொடுத்து அழைக்கிறது பிரித்தானியா!

File
File Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள மருத்துவர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவர்களை அங்கு வந்து பணிபுரியுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென அங்கு குடியேறுவதற்கான செலவாக ஒவ்வொரு மருத்துவருக்கும் 34 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020/21 ஆண்டுக்கென 2000 வெளிநாட்டு மருத்துவர்களை பணிக்கமர்த்த பிரித்தானியாவின் National Health Service (NHS) திட்டமிட்டுள்ளது.

பிரித்தானியாவில் முன்னெப்போதும் இல்லாதளவு மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் வெளிநாடுகளிலுள்ள தகுதிவாய்ந்த மருத்துவர்களை தெரிவுசெய்யும் பணியில் இரு முகவர் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் London Ambulance சேவைக்கென ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட அவசர மருத்துவ உதவியாளர்கள் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now