நவுறு அகதி ஒருவர் palliative care எனப்படும் நோய்த்தணிப்பு நிவாரணத்தைப் பெறுவதற்காக ஆஸ்திரேலியா வர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
பல்வேறு தரப்புக்களிலிருந்தும் வழங்கப்பட்ட அழுத்தங்களையடுத்து குறித்த நபரை ஆஸ்திரேலியா அழைத்துவர அரசு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஆப்கான் ஹஸரா பின்னணி கொண்ட 63 வயதான ஆண் ஒருவர் நாட்பட்ட நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுவதாகவும் அவர் இன்னமும் சில மாதங்கள் மட்டுமே உயிர்வாழ்வார் என்பதால் அவரை ஆஸ்திரேலியா அழைத்துவந்து palliative care வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுத்த ஆஸ்திரேலிய அரசு வேண்டுமானால் அவரை தாய்வானுக்கு அனுப்பி வைக்கலாம் என்று எனவும் கூறியது.
குறித்த நபர் உண்மையான அகதி என இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவரைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு ஆஸ்திரேலியாவுக்கு உள்ளபோதிலும் அதனைத் தட்டிக்கழிப்பது மட்டுமல்லாமல் இறந்துகொண்டிருக்கும் மனிதனின் இறுதி ஆசையைக் கூட நிறைவேற்ற மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் எனவும் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வெளியிட்டப்பட்டதையடுத்து குறித்த நபர் தற்போது பிரிஸ்பேர்ன் நகருக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
