SKIP TO MAIN CONTENT

மடிக்கும் வசதியுள்ள Samsung கைபேசி ஏப்ரலில் அறிமுகம்!

Samsung
Source: Samsung

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

கைத்தொலைபேசித் தொழில்நுட்பத்தின் புதிய புரட்சியாக மடிக்கும் வசதியுடைய கைத்தோலைபேசிகளை Samsung நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆஸ்திரேலியா பெறுமதியில் 2760 டொலர்கள் மதிப்புடைய இந்த கைத்தொலைபேசியை எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி வெளியிடவுள்ளதக Samsung நிறுவனம் அறிவித்துள்ளது.

Galaxy Fold என்ற பெயருடன் வெளிவரவுள்ள இந்த புதிய ரக தொலைபேசிக்கென Facebook, Google போன்ற நிறுவனங்கள் பிரத்தியேக செயலிகளை வடிவமைத்துள்ளதாக Samsung தெரிவித்துள்ளது.

இந்த புதிய மடிக்கும் வசதியிலான கைத்தொலைபேசியின் திரை மடிந்தத நிலையில்11.7cm நீளமுடையதாகவும் விரிந்த நிலையில்18.5 cm நீளமுடையதாகவும் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now