தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் நான்கு நாடகள் நேரடி விமான சேவையை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தாம் துவக்குவதாக Air India நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை நிமித்தம் மதுரை விமான நிலையம் இரவு 10 மணியையும் தாண்டி திறந்திருக்கும் என்றும், பணியாட்கள் பணியில் இருப்பார் என்றும் மதுரை விமானநிலைய அதிகாரி கூறினார்.
டெல்லியிலிருந்து கிளம்பி மதுரை வந்தடைந்து பின்னர் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் என்ற ரீதியில் Air India நிறுவனத்தின் விமான சேவை துவங்க உள்ளது. இரவு நேரம் மதுரை விமான நிலையம் செயல்படும் என்பதால் Air India மட்டுமல்ல மேலும் பல விமான நிறுவனங்களின் சேவையும் மதுரையில் துவங்கும் வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது டெல்லியிலிருந்து மதுரைக்கு வரும் உள்ளூர் விமானங்கள் சென்னை அல்லது மும்பை விமான நிலையங்களில் தரை இறங்கிவிட்டே வருகின்றன. ஆனால் முதன்முதலாக டெல்லியிலிருந்து நேரடியாக மதுரை வந்தடையும் வகையில் இந்த ஏர்-இந்திய விமானம் இயக்கப்படவுள்ளது.
