2015 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட "Mazda" BM, BN 3 ரக வாகனங்களை அந்நிறுவனம் மீளக்கோரியுள்ளது.
வாகனத்தின் கண்ணாடியை கழுவுகின்ற துடைப்பானில் (windscreen wipers) ஏற்பட்டிருக்கும் உற்பத்திவழு காரணமாக குறிப்பிட்ட ரக வாகனங்கள் பாதிப்புக்கு உள்ளானமை தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக Mazda Australia அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், 2015 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதிக்கும் 2017 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதிக்கு இடையில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 70 ஆயிரத்து 731 "Mazda 3" கார்களை தங்களது நிறுவனம் மீளப்பெற்று, குறிப்பிட்ட கண்ணாடித்துடைப்பானிலுள்ள பிரச்சினையை சரிசெய்தபின்னர் மீளளிக்கவுள்ளதாக Mazda Australia தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட திருத்தவேலையை இலவசமாக செய்துகொண்டுப்பதற்கு தங்களது சகல கிளை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ள Mazda நிறுவனம், வாடிக்கையாளர்களை 1800 034 411 என்ற இலக்கத்துக்கு அழைத்து இதுகுறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளது.
ஜப்பான் நிறுவனமான Mazda சர்வதேச வாகன உற்பத்தி சந்தையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
