SKIP TO MAIN CONTENT

Mazda, Jeep, Dodge வாகனங்களில் பிரச்சினை! மீளக்கோரும் அறிவிப்பு!!

caradvice
Source: mazda

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய வாகன ஓட்டுனர்களின் விருப்பத்துக்குரிய வாகனங்களில் ஒன்றான Mazda, தனது குறிப்பிட்ட ரக (Mazda 3 Hatchback 2019) வாகனங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவற்றை உற்பத்தி வழு காரணமாக திருத்த வேலைகளுக்காக மீளக்கோரியுள்ளது.

குறிப்பிட்ட Mazda ரக வாகனங்களின் Wheel studs-க்கும் hub-க்கும் இடையிலான பிணைச்சல், உற்பத்தி செய்யப்படும்போதே இறுக்கமாக பூட்டப்படாதது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வகையான வாகனங்களை ஓட்டுபவர்கள் உடனடியாக Mazda வாகன திருத்துனர்களை அணுகும்படியும் Mazda-வின் ஏனைய ரக வாகனங்களை பயன்படுத்துபவர்கள் சில்லுகளிலிருந்து சத்தம் கேட்டாலோ அல்லது வேறு சிக்கல்களை கண்டறிந்தாலோ உடனடியாக - முன்னெச்சரிக்ககையாக - இந்த வாகனங்களை கொண்டுபோய் சோதனை செய்யம்படியும் Mazda கோரியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்களில் மூன்றாவது இடத்தைப்பிடித்தது Mazda என்பது குறிப்பிடத்தக்கது.

Mazda 3 ரக வாகனத்தின் முன்கண்ணாடி wiper-துடைப்பான்களில் சிக்கலிருப்பதாக அண்மையில் பெருந்தொகையான வாகனங்களை  திருத்துவதற்காக Mazda மீளக்கோரியந்தமை தெரிந்ததே.

இதுதவிர windshield,wipers,brake pedal linkage clip, tyre placard உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் கீழ்க்காணும் வாகனங்களும் திருத்த வேலைகளுக்காக மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Jeep Cherokee 2008

Jeep Cherokee 2010

Dodge Nitro 2007

Dodge RAM 2500 2010, Dodge RAM 3500,2010

Jeep Compass 2007, Dodge Caliber 2007

Dodge Nitro 2007-2009, Jeep Cherokee 2008-2009

Dodge Caliber 2007, Jeep Compass 2007

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now