SKIP TO MAIN CONTENT

பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களின் பயன்பாட்டினை நிறுத்துகிறது McDonald's

McDonald's will swap plastic straws for plastic ones in all its UK and Ireland restaurants.
McDonald's will swap plastic straws for plastic ones in all its UK and Ireland restaurants. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் McDonald's துரித உணவகங்களில் இனி பிளாஸ்டிக் straw-உறிஞ்சுகுழல்களுக்குப் பதிலாக காகிதத்தால் ஆன உறிஞ்சுகுழல்கள் பயன்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இவ்வருட இறுதியில் பிளாஸ்டிக்குக்கு மாற்றீடான பொருளால் செய்யப்பட்ட உறிஞ்சுகுழல்களை அமெரிக்காவிலுள்ள சில உணவகங்களில் பரீட்சித்துப் பார்க்கவுள்ளதாக McDonald's அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் வழங்கிய அழுத்தத்தையடுத்து McDonald's இம்முடிவினை எடுத்துள்ளது.

இதேவேளை பிரான்ஸ், சுவீடன் மற்றும் நோர்வே நாடுகளிலுள்ள உணவகங்களிலும் பிளாஸ்டிக்குக்கு மாற்றீடான உறிஞ்சுகுழல்களை பரீட்சித்துப்பார்க்கும் திட்டம் உள்ளதாக McDonald's கூறியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now