SKIP TO MAIN CONTENT

துப்பரவுப் பணியாளர்களைச் சுரண்டலுக்குள்ளாக்கியவர்களுக்கு பெருந்தொகை அபராதம்!

workload
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

மெல்பேர்ன் MCG-யில் துப்பரவுப் பணியாளர்களாக வேலை செய்த 11 பேருக்கு உரிய ஊதியம் வழங்கப்படாத விவகாரத்தில் இரு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

MCG-யில் 2014ம் ஆண்டு நடைபெற்ற AFL போட்டிகளின் பின் அங்கு துப்பரவுப் பணிகளை மேற்கொண்ட 11 பேருக்கு மணித்தியாலத்திற்கு 18 டொலர்கள் முதல் 25 டொலர்கள் வரை மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், இதன்மூலம் சுமார் 37,471 டொலர்கள் குறைவாக கொடுக்கப்பட்டதாகவும் Fair Work Commission கண்டறிந்துள்ளது.

ஆஸ்திரேலிய பணி விதிமுறைகளின்படி casual loading, weekend rates, overtime போன்றவற்றுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்பதால் இதற்கான அபராதமாக ISS Facility Services Australia Limited என்ற ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு $132,217 டொலர்கள் அபராதம் விதித்து Federal Circuit Court தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் இப்பணிச்சுரண்டலுடன் சம்பந்தப்பட்ட First Group of Companies Pty Ltd முன்னாள் உரிமையாளர்களான இந்தியப் பின்னணி கொண்ட Patel மற்றும் Sidarth Luthra ஆகியோருக்கு தலா 17,926 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாக Fair Work Commission ஊடாக தெரியவந்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now