SKIP TO MAIN CONTENT

மேற்கு ஆஸ்திரேலியாவில் லேபர்கட்சி வரலாறுகாணாத வெற்றி!

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மாநில நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லேபர் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Premier Mark McGowan
Source: AAP

1 min read

Published

By Raysel


Skip to article content

மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan தலைமையிலான லேபர் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 59 இடங்களில் அறுதிப் பெருமான்மையுடன் ஆட்சியமைக்க 30 இடங்கள் தேவை. ஆனால் Premier Mark McGowan தலைமையிலான லேபர் கட்சி 52 இடங்கள்வரை வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. எதிர்கட்சியான லிபரல் கட்சி அதிகபட்சம் 3 இடங்களை மட்டுமே வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. எதிர்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் Zak Kirkup, தமது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டதோடு Premier Mark McGowan ஐ தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

லிபரல் கட்சியின் தலைவர் Zak Kirkup தான் போட்டியிட்ட Dawesville தொகுதியில் தோல்விகண்டுள்ளார். மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் எதிர்கட்சி தலைவர் ஒருவர் தனது சொந்த தொகுதியிலேயே தோற்றுபோவது கடந்த 88 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். தாம் அரசியலிலிருந்து விலகுவதாக Zak Kirkup அறிவித்துள்ளார்.

கடந்த 2017 தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்றபோதிலும் லேபர் கட்சிக்கு 40 இடங்களே இருந்தன. ஆனால் இம்முறை அக்கட்சி மேலும் 19 இடங்களை அதிகமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சியான லிபரல் கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத்தில் 14 இடங்கள் இருந்தன. ஆனால் அது இம்முறை 3 ஆக குறையவுள்ளது. அதேவேளையில் லிபரல் கட்சியின் கூட்டணிக் கட்சியான நேஷனல் கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத்தில் 5 இடங்கள் இருந்தன. ஆனால் அது இம்முறை 4 ஆக குறையவுள்ளது. ஆனாலும் லிபரல் கட்சியைவிட நேஷனல் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அக்கட்சி முக்கிய எதிர்கட்சியாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.         


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now