வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்கான ஆலோசனை!

ஆஸ்திரேலியா 2014 இல் தட்டம்மை அல்லது சின்னமுத்து(measles) நோயை அதிகாரப்பூர்வமாக இல்லாதொழித்தது. இருப்பினும், இந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்களிடையே ஏழு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் தட்டம்மை நோய் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MELBOURNE AIRPORT

Passengers at Melbourne Airport in Melbourne. Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

Measles-தட்டம்மை, flu மற்றும் கோவிட்-19 ஆகியவற்றின் ஆரம்ப அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாக விக்டோரிய சுகாதாரத் துறை கூறுகிறது.

உங்களுக்கு rash-சொறி ஏற்படும் அதேநேரம், கோவிட்-19 சோதனைமுடிவு எதிர்மறையாக இருந்தால், தட்டம்மை நோய்க்கு சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தட்டம்மை நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான இருமல் மற்றும் conjunctivitis ஆகியவை அடங்கும். அதைத் தொடர்ந்து தலை மற்றும் கழுத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு மங்கலான சிவப்பு சொறி பரவுகிறது.

தொற்று ஏற்பட்ட ஏழு முதல் 18 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் உருவாகலாம் எனவும், பாதிக்கப்பட்ட நபர் அந்த இடத்தை விட்டு வெளியேறிய இரண்டு மணி நேரம் வரை வைரஸ் அந்த சூழலில் செயற்படுநிலையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

தட்டம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிமோனியா மற்றும் பிற கடுமையான சிக்கல்கள் உருவாகலாம் என விக்டோரியாவின் தலைமை மருத்துவ அதிகாரி, பேராசிரியர் Brett Sutton தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக தட்டம்மை நோயை இல்லாதொழித்துவிட்டதாக Health and Aged Care திணைக்களம் கூறியுள்ளது. ஆனால் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட பரவல் மற்றும் சிறிய முதல் மிதமான அளவிலான பரவல்களின் அபாயத்தை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.

"தட்டம்மை இங்கு பரவவில்லை என்றாலும், வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்கள் ஊடாக தட்டம்மை தொற்றாளர்கள் ஆஸ்திரேலியாவில் இனங்காணப்படுகிறார்கள் என Health and Aged Care திணைக்களம் SBS இடம் தெரிவித்தது.

கோடை விடுமுறைக் காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள், அம்மை மற்றும் போலியோ அபாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சில நாடுகளில் குறித்த நோய்களுக்கான பாதுகாப்பு குறைந்திருக்கலாம் எனவும், ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி, பேராசிரியர் Paul Kelly எச்சரித்துள்ளார்.

"அதிக தொற்று நோய்கள் உள்ள எந்த நாட்டிற்கும் பயணம் செய்வதற்கு முன், மக்கள் தட்டம்மை மற்றும் போலியோவிற்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தட்டம்மை பொதுவாக காணப்படும் நாடுகளில் இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவை அடங்கும்.
Australia's Chief Medical Officer, Professor Paul Kelly
இந்நாடுகள் மட்டுமல்லாமல், சில மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக இது காணப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலும் பரவல்கள் ஏற்பட்டுள்ளன.
Measles (AAP)
Measles Source: AAP
1966 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் தட்டம்மை தடுப்பூசிகளின் இரண்டு சுற்றுக்களையும் போட்டுக்கொண்டதான ஆவணங்கள் இல்லாதவர்கள் இந்நோய்த்தொற்றுக்குள்ளாகும் ஆபத்தில் உள்ளனர் என்று விக்டோரியா அரசு கூறியது.

"ஆறு மாத வயதுக்குட்பட்ட குழந்தைகள், தட்டம்மை நோய் பரவும் ஆபத்துள்ள அல்லது தட்டம்மை நோய் உள்ள வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் measles-mumps-rubella (MMR) தடுப்பூசியைப் பெறலாம்" என்று விக்டோரியா அரசு மேலும் கூறியது.

தடுப்பூசி போடப்பட்டவர்களில் 99 சதவீத மக்களுக்கு இரண்டு சுற்று தடுப்பூசிகள் வாழ்நாள் முழுவதும் இந்நோய்க்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதாக ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி, பேராசிரியர் Paul Kelly கூறினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share

Published

Updated

By Sahil Makkar
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand