Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மெல்பேர்ன் விமானநிலைய Car Park: ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

FB

Source: Melbourne Airport Facebook

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான மெல்பேர்ன் விமானநிலைய வாகன தரிப்பிடத்தின் மூலம் நாளொன்றுக்கு 4 லட்சம் டொலர்கள் வருமானம் கிடைப்பதாக Herald Sun பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு 145.1 மில்லியன் டொலர்களை short மற்றும் long-term parking மூலம் மெல்பேர்ன் விமானநிலையம் பெற்றிருக்கிறது. இது 2016ம் ஆண்டைவிடவும் 10 மில்லியன் டொலர்கள் அதிகமாகும்.

மெல்பேர்ன் விமானநிலைய வாகன தரிப்பிடம் ஊடாக ஒவ்வொரு டொலரிலிருந்தும் 65 சதங்கள் லாபமீட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 2016-2017 காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் சுமார் 3 லட்சத்தி 97 ஆயிரம் டொலர்கள் வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தற்போது குறித்த விமான நிலையத்தில் வாகனத்தை நிறுத்துபவர்கள் 15 நிமிடங்களுக்கு 4 டொலர் முதல் ஆகக்கூடிய தொகையாக இரு வாரங்களுக்கு valet parking-இல் 684 டொலர்கள் வரை செலுத்துகின்றனர்.

இதேவேளை கடந்த மாதம் short-term parking-க்கான கட்டணத்தை 20 வீதத்தால் மெல்பேர்ன் விமானநிலையம் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 min read

Published

Updated

Presented by Renuka



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now